Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » நேரில் கண்ட சாட்சியத்துடன் சனல் 4வின் மற்றுமொரு அதிர்ச்சி காணொளி (video in)

நேரில் கண்ட சாட்சியத்துடன் சனல் 4வின் மற்றுமொரு அதிர்ச்சி காணொளி (video in)

Written By Eve on Wednesday, July 27, 2011 | 9:49 PM

 சனல் 4 தொலைக்காட்சி ஈழப் போர் தொடர்பான சில ஆவணங்களை வெளியிட்டிருந்தது.அதில், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின்படியே மக்களை சுட்டதாக கூறியிருந்தார்.

ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் மும்முர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக கூறுகின்றார்.

இவ் இறுதிப் போரின் போது காண்போர் எல்லோரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமை இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், எனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான பெருந்திரளான மக்களை கொல்லவில்லை எனவும், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக் களம் ஆவணத் திரைப்படத்தைப் பார்வையிட்டு, இவ் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இப்படியான கொடுமையா நடந்தது என பயந்து, நாங்களும் ஒரு இலங்கைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தோம் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தகுற்றங்களுக்கு ஆதாரமென கூறி சனல் 4 மற்றுமொரு 13 நிமிட காணொளித் தொகுப்பினை ஒளிபரப்பியுள்ளது.

இந்த காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாளர்கள் என இரு யுத்த வீரர்களது நேர்காணல்களும் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

குறித்த காணொளியில் சாட்சியம் எனக் கூறப்பட்ட இருவரது முகங்களும் அடையாளம் காணமுடியாது மறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களின் பெயர் பெனாண்டோ மற்றும் சுஸ்ரத எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளிடமிருந்தும் சிவில் உயரதிகாரிகளிடமிருந்தும் “முடித்துவிடுங்கள்” என உத்தரவிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளியின் நிறைவில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் உரையில் சிறுபகுதியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தன் மகன் யுத்தகுற்ற ஆவணப் படத்தை பாரத்துவிட்டு, தான் இலங்கையர் மற்றும் சிங்களவர் என்று சொல்லுவதற்கு வெட்கப்படுவதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாக உரையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கூறியிருந்தார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger