Home »
» [audio] மும்பையில் மகிந்த இராசபக்சே கொடும்பாவி எரித்து போராட்டம்
[audio] மும்பையில் மகிந்த இராசபக்சே கொடும்பாவி எரித்து போராட்டம்
மும்பையில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டியினை காணவரும் போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழித்தெழு இளைஞர் இயக்கம், உலகத்தமிழர் பேரமைப்பு, பெரியார் திராவிடர் கழகம், பாரதீய ஜனதா கட்சி, நாம் தமிழர்கட்சி சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து மகிந்தவின் கொடும்பாவி எரித்துப்போராட்டம் நடத்தியுள்ளனர். நிகழ்விடத்திலிருந்து நமக்களித்த செவ்வி இணைப்பு மேலும்>>
-
Posted: Thu, 31 Mar 2011 20:23:02 +0000
தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயார் "தேசத்தாய் பார்வதியம்மாள்" அவர்களின் இறுதி அஸ்தி இன்று (31.03.2011) குமரிமாக்கடலில் கரைக்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அய்யா பழ.நெடுமாறன் மற்றும் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். [காணொளி 2ஆம் இணைப்பு] தேசத்தாயின் அஸ்தியானது மாதனி விடுதியிலிருந்து வைகோ, பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக குமரி முனைக்கு மக்கள் திரளுடன் சென்றனர். இந்நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக [...]
-
Posted: Thu, 31 Mar 2011 17:26:02 +0000
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில் ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின் மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் [...]
-
Posted: Thu, 31 Mar 2011 13:25:52 +0000
கரும்புலி மேஜர் ஆந்திரா/தாயகம் விநாயகமூர்த்தி சுதர்சினி மருதங்கேணி, யாழ்ப்பாணம் அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள். சின்ன வயதில் சைக்கிள் ஓடப்பழகிய ஆரம்ப நாட்களில் இவளுக்குச் சைக்கிள் ஓடப்பழக்கியது அண்ணன்தான். மண் ஒழுங்கைகள் எல்லாம் அவன் சைக்கிளைப் பிடிக்க அவள் ஓடுவாள். ஒவ்வொரு அடிதூரம் போகவும் அவன் கையை விட்டுவிடுவானோ என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பாள். "நேர அந்த வீட்டைப்பார்… நேர அந்த வீட்டைப்பார்" என்று அண்ணன் அடிக்கடி கத்துவான். அவள் [...]
-
Posted: Thu, 31 Mar 2011 01:36:17 +0000
மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் ஏதிலிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது. சட்டபூர்வமாக மலேசியாவில் தங்குவதற்கு அனுமதியற்ற நிலையில், வேலைவாய்ப்பு -கல்வி – மருத்துவம் ஆகிய அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர். இதேவேளை, சட்டபூர்வ வதிவிட அனுமதி பத்திரம் அற்ற நிலையில் உள்ளுர் கண்காணிப்பு காவலாளிகளால், ஏதிலிகள் கைது செய்யப்பட்டு, இரகசியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அச்ச நிலையும் தோன்றியுள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே யுஎன்சீஆர் ஐநா நிறுவனம் உட்பட பல உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் [...]
-
Posted: Tue, 29 Mar 2011 10:28:27 +0000
கடந்த ஏப்ரல் 26 சனிக்கிழமை தமிழர் பறை குழுவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக தேர்தல் குறித்து மக்களிடம் கருத்துகளை காணொளியாக பதிவு செய்தனர். இக்குழுவில் செந்தில்குமார், ராஜ்குமார் பழனிசாமி, சந்தியா ராஜ்குமார், ரதீஷ் முதலானோர் பங்குபெற்றனர். மேலும்>>
No comments:
Post a Comment