ஜப்பான் நாட்டின் வட கிழக்குப் பகுதியை இன்று மிக பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இதையடுத்து உருவான சுனாமி பேரலைகள் ஊர்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
வடக்கில் கண்ணிவெடியகற்றும் அபாயகரமான பணிகளில் தமிழ்ப்பெண்கள்
வடக்கில் நிலக் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள், தமது குடும்பங்களின் பிரதான வருவாய் ஈட்டுனர்களாக காணப்படுவதாக வடக்கில் கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களில் ஒன்றான டெனிஸ் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா அரசு போரின் பின்னர் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கிறது: பாக்கியசோதி சரவணமுத்து
போர் முடிவுற்றப் பின்னர் அபிவிருத்தியை நோக்கி இலங்கை பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் இராணுவ ஆட்சியைத் தழுவிய, சுயநலவாத மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் தலைவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவனும், சிறையில் இருக்கும் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போர்ப்படை இயக்கத்தின் தலைவன் சத்திரதார் மகாதோவின் தம்பி சசாதர் மாகாதோ.
சப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; ஆழிப்பேரலை எச்சரிக்கை
சப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக ஜப்பான் கடலோர பகுதிகளை ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கும் என்று அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிறந்த இரு குழந்தைகளை மண்ணில் புதைத்த மூவர் கைது
கிளிநொச்சியின் அக்கராயன்குளம் பகுதியிலுள்ள அண்ணா சிலையடி குடியிருப்பில் பிறந்தவுடன் இரட்டை சிசுக்களை புதைத்த மூவரை அக்கராயன் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளனர்.
ஐ.தே.கட்சியினர் மீது துப்பாக்கிச்சூடு
கடவத்தையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அபேட்சகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பிரசாரக் கூட்டம் ஒன்றிற்கான அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கோரி 55,000 பேர் கையெழுத்து
சிறீலங்காவில் சுயாதீனமான யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சுமார் 55 ஆயிரம் பேர் கைச்சாத்திட்ட கோரிக்கை மனு ஒன்று, கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களும், பொலிசாரும் மோதல்
சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கும் மற்றும் பொலிசாருக்குமிடையிலான கடும் மோதல் சம்பவமொன்று ஹோமாகமையில் நடைபெற்றுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசைவிட்டுப் பிரிந்து செல்லும் எம் பிரியமானவர்களே!- பிரதிப் பிரதமர் விடுக்கும் வேண்டுகோள்
ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள்.
விமல் வீரவன்ச கருத்திற்கு பதிலடி கொடுத்த சரவணபவன்
தமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும். சிறிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் முறையற்ற கருத்தைத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சபையில் வைத்தே யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சரியான பதிலடி வழங்கினார்
ப்ரித்தானியா மக்கள் தொகை கணக்கெடுப்பில் "தமிழீழம்" என்றே பதிவோம்
பிரித்தானியாவில், பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதே வாக்கெடுப்பின் (Census) நோக்கமாகும்.
தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்பட்டால் ஐ.தே.கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – கரு ஜயசூரியா
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
களனி பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் எவ்வித தடையுமின்றி பிரசாரங்களை மேற்கொள்ள முடியும்: மேர்வின் சில்வா
அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தேர்தல் பிரசாரம் செய்வதனை தடுக்கும் நோக்கம் எதுவும் தமக்குக் கிடையாது என தெரிவித்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்தில் எந்தவொரு கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என அறிவித்துள்ளார்.
மிருசுவில் படுகொலை இடத்தை 10 ஆண்டுகள் பின்னர் சென்று பார்வையிட முடிவு
10 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்களை கொலை செய்த இடத்தை, நேரில் சென்று பார்வையிட கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.
குவைத் சிறீலங்காத் தூதரகத்தில் 4500 இலங்கையர்கள் பதிவு
சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 4500 இலங்கையர்கள் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை இப்பொழுதும் காதலிக்கும் பெண்
பதவிக்காலத்தில் காதல் பிரச்சினையால் சர்ச்சைக்குள்ளாகிய முன்னாள் ஜனாதிபதியை தாம் இன்னும் காதலிப்பதால் தான் இன்னும் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று 37 அகவைப்பெண் தெரிவித்துள்ளார்.
ஈழவிடுதலைக்கான கருத்தியலை தாங்கி நிற்கின்ற தமிழ் இணைய ஊடகங்களை விழிப்பாக இருக்க வேண்டுகிறோம்: நா.க.தமிழீழ அரசாங்கம்
சைபர் தாக்குதல்கள் குறித்து ஈழவிடுதலைக்கான கருத்தியலை தாங்கி நிற்கின்ற தமிழ் இணைய ஊடகங்களை விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசின் தகவல்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளனர்..
குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறுகிறார் கடாபி
தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தலாய்லாமா அரசியலில் இருந்து ஓய்வு
திபெத்தியர்களின் விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தலாய்லாமா விரைவில் திபெத்திய அரசியல் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். திபெத்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை அளிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment