-
கிழக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய மதகுரு உள்ளிட்ட மூவர் கடத்தல்
Posted: Fri, 25 Feb 2011 06:13:25 +0000
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த மதகுரு உள்ளிட்ட மூவர் சிறீலங்காப்படை புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளார்கள். அண்மைய காலங்களில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய தமிழர்தாயக பகுதிகளில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறீலங்கா அரசின் முழுமையான உதவிகள் சென்றடையாத நிலையில் மேலும்>>
-
மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கான நபர் ஊரைவிட்டு வெளியேறினார்
Posted: Fri, 25 Feb 2011 05:47:03 +0000
யாழ்ப்பாணம் கரவெட்டியில் சிறீலங்காப்படையின்ஒட்டுக்குழுவான மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் கரவெட்டியினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் அடிச்சுவீட்டுப்பகுதியில் இருந்த மன்னன் அரசண்ணா என்பவர் சிறீலங்காப்படையின் மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்காகி காயம் அடைந்துள்ள நிலையில் அவர் கரவெட்டியினை விட்டு வேறு இடம்மாறியுள்ளார்.மேலும்>>
-
நாமல் – கடாபி ஆகியோருக்கிடையில் படத்தில் காணப்படும் நபர் யார்?
Posted: Fri, 25 Feb 2011 04:53:27 +0000
இந்த நிழற்ப்படத்தில் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள நபர் லிபியத் தலைவர் கேர்ணல் மஹமுர் அல் கடாபியுடன் மிக நெருக்கமானவர். இவர் இலங்கை வர்த்தகர் ஒருவர். துபாயை மையப்படுத்தியே இவர் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். மேலும்>>
-
சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனம்! அன்னை பார்வதி அம்மையாரின் சிதையைச் சேதப்படுத்திய கொடுஞ்செயல்! வைகோ கண்டனம்
Posted: Thu, 24 Feb 2011 17:33:08 +0000
உலகில் இதுவரை எங்கும் நடக்காத, எவரும் செய்யத் துணியாத மாபாதக ஈனச் செயலை, கொடியவன் இராஜ பக்சே அரசின் சிங்கள இராணுவம் நடத்தியுள்ளது. மாவீரர் திலகம் பிரபாகரனைப் பெற்றெடுத்த அனனை பார்வதி அம்மையாரின் இறுதிச் சடங்குகளைக் கூட முறையாக நடத்த விடாமல் சிங்கள இராணுவம் அக்கிரமம் செய்துள்ளது. நேற்று முன்தினம் அன்னை பார்வதி அம்மையாரின் நல்லுடல் சிதையில் வைத்து நெருப்பு மூட்டப்பட்டது. அந்த நெருப்பு அணையும் வேளையில் சிங்கள இராணுவத்தினர் புரிந்த மாபாதகச் செயல், தமிழர் நெஞ்சங்களில் [...]
-
காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?
Posted: Thu, 24 Feb 2011 16:17:10 +0000
2011 தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டது. அரசியல்கட்சிகளின் பேரங்கள் சுறுசுறுப்பாக நடந்துவருகின்றன. அரசியல் கட்சிகளின் இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்டத் தலைவர்கள் கோடிகளைத் தயாரித்துக்கொண்டுள்ளனர். அடிமட்டத் தொண்டர்கள் "சாலைகள் எல்லாம் டாஸ்மாக் நோக்கி" என அடுத்த இரண்டு மாதங்களுக்கான கனவில் உள்ளனர். தன்மானத்தமிழர்களோ ஓட்டுக்கு 500 கிடைக்குமோ? 1000 கிடைக்குமோ? என சிந்தித்துக்கொண்டுள்ளனர். இச்சம்பவங்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் நாம் சந்திப்பவைதான். தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடும் கட்சிகள் ஒட்டுக்காக உழைப்பதைவிட தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடாத சமுதாய அமைப்புகளான பெரியாரிய [...]
-
சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு
Posted: Thu, 24 Feb 2011 07:44:54 +0000
சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 28.02.2011 அன்று திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் நேற்றிரவில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த [...]
-
பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் என்பனவற்றை அரசு உடன் நிறுத்த வேண்டும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Posted: Thu, 24 Feb 2011 02:28:08 +0000
இன்று காலை 10.30 மணியளவில் இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள த.தே.ம.மு வின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளது. கடந்த 20-02-2011 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுக் கூட்டம் நடாத்தப்பட்டு அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குரிய மத்திய குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் தலைவராக சின்னத்துரை வரதராஐன் அவர்களும், பொதுச் செயலாளராக செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன் மத்தியகுழு உறுப்பினர்களது விபரங்களும் அறிவிக்கப்பட்டது. [...]
-
ஒற்றுமையில்லா வனத்தின் வதை..
Posted: Thu, 24 Feb 2011 01:23:20 +0000
ஒரு கடல் தாண்டிய வனம் தான் - நான் வசிக்கும் காடு.. ஒற்றுமை எனும் கடல் தாண்டிய வனம் அது. சுயநல மரங்களும் மனிதரை விட அதிகம் மிருகங்களும் வாழும் காடு அது. மிருகங்களை தின்று மனிதர்கள் வாழும் அந்த வனத்தில் – கடவுளுக்கே பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!! அங்கே - மழைக் கூட லஞ்சமும் ஊழலுமாகத் தான் பொழிகிறது. பொறாமையும் ஒருவரை ஒருவர் அழிக்கும் வஞ்சமும், இடிபோல் இரக்கமற்ற வானில் தினமும் இடித்துக் கொள்கின்றன – அந்த [...]
-
சோனியா அம்மாவுக்கு பயந்து பார்வதி அம்மாவை மறந்த தமிழக வீரத் தமிழர்கள்.
Posted: Thu, 24 Feb 2011 00:57:40 +0000
ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்.. பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கேப்டன் பிரபாகரன் மன்னிக்க கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்… இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா.. ஈழத் [...]
-
வாழ்நாள் சிறையில் தலித்துக்கள்
Posted: Wed, 23 Feb 2011 17:04:52 +0000
பாரம்பரியமாகத் தொடரக்கூடியவையாக இருப்பதாலும் வேறு எளிதாகக் கிடைக்கக் கூடிய மாற்றுக்கள் இல்லாததாலும் பலசமயங்களில், சமூகரீதியாக வெறுக்கக் கூடிய 'தூய்மையற்ற' தொழில்களில் தலித்துக்கள் சிக்கவைக்கப்படுகின்றனர். பல லட்சக்கணக்கான பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் அவர்கள் பிறப்பு காரணமாகவே இழிவாகக் கருதக் கூடிய, சமூக ரீதியில் அவமதிப்புக்குரிய தொழில்களில் தொடர்ந்து இருக்கும் வகையில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். காலங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் இந்தியாவின் எண்ணற்ற கிராமங்களில் சாதி அமைப்பு முறை பெருமளவில் நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. அது ஒருவர் பிறந்த [...]
No comments:
Post a Comment