தற்போதைய செய்திகள்
சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்களின் காரணமாகவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
காலி - மாத்தறைக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை எதிர்வரும் புதன்கிழமை முதல் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனுராதபுரத்திலுள்ள புனித வெள்ளரச மரத்தின் கிளை ஒன்று இன்று யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தியாவிற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற புனித வெள்ளரசு மரக் கிளை ஒன்று இலங்கையிலுள்ள அனைத்து முக்கிய விகாரைகளுக்கம் எடுத்துச் செல்லப்படுவதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக பெருந்தொகையான கால்நடைகள் இறந்துள்ளன என்று மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி நேற்றுத் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதியினை நீடித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேவினுடைய பதவிக்காலம் நிறைவடைந்து அவர் இன்றிரவு நாடு திரும்புகிறார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை மவாட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்விச் செயலாளர் அனில் விஜயசிறி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபல உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவரிடம் கைவிரல் அடையாளம் பெற்று அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றிம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் கொலை செய்துவிட்டு இந்தியாவில் தலைமறைவான இளைஞர் ஒருவரை இந்திய கியூப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டி இலக்கங்கள் வழங்கப்பட்டதுடன், தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.
கிழக்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மூன்று தினங்கள் மூடப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை முதல் வழமை போல் இயங்கும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார். மாகாணத்தில் 50 வீதமான பாடசாலைகள் வெள்ளத்தால் இயங்க முடியாத ...
சிறீலங்காவின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டுள்ளன.
சிறீலங்காவுக்கு நிபுணர் குழு விஜயம் செய்யும் என ஒன்றிய நாடுகள் அவை (UNO)யின் செயலாளர் தலைவர் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பெரியபுலம் மகாவித்தியாலையத்தின் ஆசிரியை ஒருவர் நேற்று மாணவர் ஒருவரால் கடுமையாயாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வுக்காக, சிறீலங்கா அதிகாரிகள் குழு, தூத்துக்குடி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
துவிச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்து வந்த 14 வயது மாணவர் ஒருவர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை டன்பார் தோட்டத்தை சேர்ந்த கன்னையா புஸ்பராஜ் என்பவரை கடந்த சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை.
இடைநிறுத்தப்பட்டிருந்த பூநகரி - மணியந்தோட்டப் படகுச்சேவை நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணிக்கு மணியந்தோட்டத்திலிருந்து பூநகரி செல்லும் படகு பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் பூநகரியிலிருந்து மணியந்தோட்டத்திற்கு புறப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து தகவல் அறிந்து கொண்டு அதனை பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்காமல் மறைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி லக்ஷ்மன் குரேவிற்கு எதிராக பாரிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர் ஒருவரின் மகனது பாலியல் செயலொன்று இலங்கைக் கிரிக்கெட் அதிகாரிகளிடையே அம்பலமாகியுள்ளது.
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment