பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் 8 வது நாளாக உணவு புறக்கணிப்பு போராட்டம்
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி பட்டினிப் போராட்டத்தை கடந்த 1 ஆம் திகதி முதல் துவக்கி இருந்தனர். இவர்கள் பல ஆண்டுகளாக சந்தேகத்தின் அடிப்படையில் இங்கு தங்க வைக்கப்பட்ட்டுள்ளனர். மேலும் »
சிறுவர் கிரிக்கெட் அணியில் விளையாடும் சிங்கள அமைச்சரின் மகன் அறையில் விலை மாது
அண்மையில் முடிவடைந்த சிறீலங்காவுக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட சிறீலங்கா அமைச்சர் ஒருவரின் மகனது பாலியல் செயலொன்று சிறீலங்காக் கிரிக்கெட் அதிகாரிகளிடையே அம்பலமாகியுள்ளது. மேலும்>>
தமிழீழ தேசிய அடையாள அட்டை இணையதளத்தில்
உங்களுடைய தமிழீழ தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்!. மேலும் »
லண்டனில் நடைபெற்ற முத்துக்குமார், முருகதாசன் உட்பட 19 தியாகச் சுடர்களின் நினைவுவணக்க நிகழ்வு
தியாகச் சுடர்களான முத்துக்குமார், முருகதாசன் உட்பட்ட 19 தியாக சீலர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் (06.01.2011) நேற்று இடம்பெற்றது. மேலும் »
கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல… (மீள்பதிவு)
[2005 பெப்ரவரி 7] சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. மேலும் »
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம். மேலும் »
தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்
தமிழீழ தேசிய தலைவரின் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதும் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் »
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் 1 பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலை
வந்தாறுமூலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள், ஒரு உணவுப் பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள மேலும் »
விழுப்புரத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்க்கான வீரவணக்க பொதுக்கூட்டம்
தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். மேலும் »
இந்தியாவின் ஒருமைப்பாடு சுக்குநூறாகும், எச்சரிக்கிறேன் – வைகோ ஆவேசம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து நேற்று நாகப்பட்டினம், அவுரித்திடலில் நடந்த மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தை மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ மேற்கொண்டார். மேலும் »
திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் இரு சடலங்கள் மீட்பு
திருகோணமலை முள்ளிப்பொத்தானை 97 ஆவது மைல் கல்லுக்கு அருகிலுள்ள வயல் வெளியிலிருந்து இருவரின் சடலங்கள் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளன. மேலும் »
சென்னை சிறையில் இருக்கும் சிங்கள மீனவர்களின் கழிவறையை கூட தமிழர்கள் தான் சுத்தம் செய்கிறார்கள்: சிங்கள மடத்தை தாக்கிய வழக்கில் சிறை சென்ற பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர் பேட்டி
சென்னை சிறையில் இருக்கும் சிங்கள மீனவர்களின் கழிவறையை கூட தமிழர்கள் தான் சுத்தம் செய்வதாக சிங்கள மடத்தை தாக்கிய வழக்கில் சிறை சென்று விடுதலையான பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டப்பொறுப்பாளர் டேவிட் பெரியார் தெரிவித்துள்ளார். மேலும் »
சிவில் பாதுகாப்புச் சிப்பாய்கள் எயார் டெல் சேவையைப் பயன்படுத்த வேண்டுமென வற்புறுத்தப்படுகின்றனர்
சிறீலங்காவின் சிவில் பாதுகாப்பு சிப்பாய்களுக்கு பலவந்தமாக வழங்கப்பட்ட எயார் டெல் தொலைத்தொடர்பிற்கான மாதாந்த தொலைபேசிக் கட்டணப் பட்டியலொன்றை எயார் டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் »
ஒட்டுக்குழுவினரின் தாக்குதலில் ஈழம் ஈ நியூஸ் செயலிழப்பு
சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் தாக்குதலில் ஈழம் ஈ நியூஸ் இணையத்தளம் இன்று (06) செயலிழந்துள்ளதாக ஈழம் ஈ நியூஸ் நிர்வாகத்தினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் »
தேவநேயப்பாவாணர் பிறந்தநாள்
திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்த நாள் இன்று (07.02.1902). இவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மேலும் »
வன்னியின் ஈழநாதம் ஊடகர் கா.சுரேன் கனேடிய நீதிமன்றத்தால் விடுதலை!
வன்னிப் போரின் ஊடகப்பணியில் அரும்பணியாற்றிய ஈழநாதம் ஊடகர் கார்த்திகேசு சுரேன் கனேடிய நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சன்சீ ஏதிலிகள் கப்பலில் பயணித்த ஈழத்தமிழ் ஏதிலிகள் ஈழநாதம் ஊடகர் சுரேனும் இடம்பெற்றிருந்தார். மேலும் »
கொக்கட்டிச்சோலை விசாரணைக்குழு முதல் இன்றைய நல்லிணக்க ஆணைக்குழு வரை…-இதயச்சந்திரன்
கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணி புரிந்த 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடந்து விட்டது. பிரேமதாசாவினால் இது குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கண் துடைப்புக் கமிஷன் இதுவரை எதுவித தீர்ப்பினையும் வழங்காத நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவென்கிற புதிய கமிஷன் ஊர்கள் தோறும் சென்று மக்களின் கருத்துகளை பதிவு செய்கிறது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment