திருக்கோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் தேசியத்தலைவர் முகமுடைய நாட்காட்டி!
திருக்கோணமலை உப்புவெலி கன்னியா வெந்நீர் ஊற்று வனப் பகுதியில் இருந்து தமிழ் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகைப்படம் அடங்கிய நாட்காட்டி ஒன்றினை சிறிலங்கா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் »
ஐ.நா. நிபுணர் குழு இங்கு விசாரணைக்கு வருமானால் விஸா வழங்கப்பட மாட்டாது- கெஹலிய
ஐ.நா. நிபுணர்கள் குழு நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க இலங்கை வருவதாகவிருந்தால் மாத்திரமே அக்குழுவுக்கு விஸா வழங்கப்படும். விசாரணை நடத்த வருவதாகவிருந்தால் விஸா வழங்கப்படமாட்டாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலியரம்புக்வெல நேற்றுக் கூறினார். மேலும் »
இனவாதம் தூண்டும்நடவடிக்கையில் அரசு ஜே.வி.பி. குற்றச்சாட்டு
இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அரசு இப்போது ஈடுபட்டு வருகிறது. தேசிய கீதம் தொடர்பான பிரச்சினை இதற்குச் சிறந்த உதாரணமாகும் என ஜே.வி.பி.நேற்று குற்றம்சாட்டியது.ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. மேலும் »
வட, கிழக்கு தமிழர்களின் தாயகம்: ஹெல உறுமயவுக்கு சிறிதரன் எம்.பி பதில்
வடக்கு – கிழக்கு என்பது தமிழர்களின் தாயகமாகும். அவர்களுக்கென தனித்துவமான பண்பாடு, ஒழுக்கங்கள், விழுமியங்கள், வரலாறு உண்டு. அதை விடுத்து தமிழர் ஓர் இனம் அல்ல எனக் கூறுவது இன வேற்றுமையை ஏற்படுத்தும் செயலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். மேலும் »
ஊத்துக்குளி வட்டார அருந்ததிய மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறைகள்!
தமிழகம் முழுவதுமுள்ள தமிழ்த்தேசிய, ஈழ ஆதரவு சக்திகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கில் தமிழக உளவுத்துறையால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே ஊத்துக்குளி வட்டார இரயில்கவிழ்ப்புச் சதிகள். மேலும் »
இலக்கணங்களுக்குக் கட்டுப்படாத இலக்கியம் – திராவிடம்
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான எஸ்.கே.பிஸ்வாஸ் அவர்கள் 'பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய மிகச்சிறப்பான மார்க்சிய ஆய்வுநூல் ஒன்று தலித்முரசு இதழில் தமிழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த ஆய்வாளர் கூறுகிறார், மேலும் »
மன்னாரில் நான்கு இளைஞர்கள் வெள்ளை வேனில் வந்தவர்களால் கடத்தல்
மன்னார் பகுதியில் இன்று மாலை 06.45 மணியளவில் நான்கு இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் அதிகரித்த பகுதியில் வைத்து வெள்ளை நிற வேனில் வந்த ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் »
கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம்
மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும், தமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. மேலும் »
யாழ் குடாநாட்டில் மீண்டும் தீவிரமாகியுள்ள கொலைகள், கடத்தல்கள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை
கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமல்போயுமுள்ளனர். அவ்வாறான நிகழ்வுகளால் தமிழ் மக்கள் மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர். அதிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. மேலும் »
யாழில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு தீமூட்டல்
யாழ். கண்ணாதிட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இன்று மாலை இனந்தெரியாதவர்களால் தீயூட்டப்பட்டுள்ளதாக யாழ். தெரிவிக்கின்றனர். இன்று மாலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் »
பசில் ராஜபக்சேவிற்கு 50 ஏக்கர் தென்னந்தோட்டம் சொந்தமாகியது
குளியாப்பிட்டிய, கடுபொத்த முனமல்தெனிய வீதியில் அமைந்துள்ள சிங்கோ எஸ்டேட் என்ற 50 ஏக்கர் தென்னந்தோட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சே கொள்வனவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் மேலும் »
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்
ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தாக்கப்பட்டமையை கண்டித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்முனையில் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் »
ஈழத் தமிழ் மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழக கதவு திறந்தே இருக்கும்: துணைவேந்தர்
இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு என சென்னைப் பல்கலைக்கழகத்தில் விசேட இடமுண்டு என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் திருவாசகம் தெரிவித்துள்ளார். மேலும் »
ஆனைக்கோட்டையில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு
கிணறு ஒன்றில் வீழ்ந்து மரணம் அடைந்ததாகக் கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் »
யாழ் திருநெல்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குளுவினால் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மேலும் »
அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு
அவசரகாலச்சட்டத்தை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் போது பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மேலும் »
மன்னார், முல்லை அரச அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம்!
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஒத்துழைக்காமையால் மன்னார் அரச அதிபர் நீக்கிலாஸ் பிள்ளை உடனடி இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேலும் »
தமிழ் கைதிகளின் பெற்றோர்கள், பிள்ளைகளின் விடுதலை கோரி கோத்தபாயவிற்கு கடிதம்!
சிறையில் உள்ள தமிழ் கைதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் விடுதலை கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். பிறந்திருக்கும் இந்த புதிய புத்தாண்டிலாவது எமது பிள்ளைகளை மேலும் »
ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும் – யுவபாரதி
ஒரு பெரிய குடோன். அதில் சிமிட்டிப் பைகளால் தடுக்கப்பட்ட 80 சதுரடி அளவிலான அறைகள். ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம். தலைக்கு மேல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இது தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் முகாம் குடியிருப்பு. மேலும் »
சிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்
சிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>
கருத்துக்களம்
- உலகம் • டர்பனை கழற்றச் சொல்லி சோதனை : அடுத்த அவமானம் அரங்கேற்றம
- தமிழகம் • ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை
- இந்தியா • காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாவிட்டால் முதல்வர் ராஜிநாமா ச
- இந்தியா • சோனியாவிடம் சவாண் ராஜிநாமா கடிதம்
- இந்தியா • விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை-வெங்கையா நாயுடு
தமிழ்ப்பாக்கள்
- தமிழா!! விழிப்பாயிரு நெருப்பாயிரு-சங்கிலியன்
- அமைதியாய் இருந்தவளே!!ஆவேசமாய் வந்தாயம்மா,,,,,,,,,,,,,-சங்கிலியன்
- கரையாத காவியம் எம்ஜிஆர் – மீனகம் கனி
- மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக – வித்யாசாகர்!
- இது விடுதலைக்கான தீ………(1) வித்யாசாகர்!
உலகச்செய்திகள்
- தமிழ் இளைஞர் யுவதிகள் 336 பொலிஸ் பயிற்சி முடிப்பு
- இலங்கைக் குறித்து தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!
- 15 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு
- ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும்; தனி தெலுங்கானா அமைத்தால் ஐதராபாத் யூனியன் பிரதேசம்: ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை
- ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய கட்சியின் பெயர் பதிவு
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment