கிழக்கில் தொடரும் இன்னல்கள்: தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் அக்கறை காட்டவில்லை
கிழக்குப்பகுதி உட்பட இலங்கையில் பெய்துவரும் கடும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரையில் 27 உயிரிழப்பக்கள் இடம்பெற்றுள்ளன. 11பேரை காணவில்லை எனவும் 47பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் இன்று காலை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் »
கடற்புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி
17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது. மேலும் »
சிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்
சிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>
மாணவர்களுக்கு கொடுத்த மகிந்த ராசபக்சே நாட்காட்டியை எரிக்கும் போராட்டம்: பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு
இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. [ நாட்காட்டி இணைப்பு] மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment