கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிடுவோம் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்ப்போம்" – மனோ கணேசன்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி பொங்கல் விழாக்களை கொண்டாட முடியாத சூழல் இன்று ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் வழிக்கு பதிலாக இம்முறை தை வலியுடன் பிறக்கின்றது. மேலும் »
இயற்கையின் சீற்றத்தால் இன்னலுறும் உடன்பிறப்புகளுக்கு தாராளமாக உதவுங்கள்
நினைவுக்கு எட்டிய வரையில் இதுவரை கண்டிராத இயற்கையின் சீற்றத்தை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பல மாவட்டங்களும் இயற்கைப் பேரனர்த்தத்திற்குள் சிக்குண்டுள்ளதால் மேலும் »
வெள்ளத்தில் வயோதிபர் சடலம் மீட்பு
எமது மக்களின் மனிதாபிமான உதவிகளுக்கு ஒன்றாய் அணிதிரள்வோம்
எமது தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்ததே. எமது தாயக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைப் போக்கும் பாரிய கடமை எம்முன் காத்துநிற்கிறது. மேலும் »
மாணவர்களுக்கு கொடுத்த மகிந்த ராசபக்சே நாட்காட்டியை எரிக்கும் போராட்டம்: பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு
இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. [ நாட்காட்டி இணைப்பு] மேலும் »
தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான்
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை… மேலும்>>
தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் சிறீலங்காவுக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?
இராமேஸ்வரத்தில் இருந்து கேபிள்கள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் கொண்டுச் செல்லப்படுவதாக இந்திய சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் வை.சிவபுண்ணியம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்>>
சிறீலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி
சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும்>>
மரண தண்டனை ஒழிப்பில் நீதிநாயகம் பி.என்.பகவதி அவர்களின் பங்கு
மரணதண்டனை என்பது அகிம்சை கொள்கைக்கு எதிரானது. யார் உயிரை கொடுக்க முடியுமோ அவர்தான் எடுக்கவும் வேண்டும். அகிம்சையை மதிக்கும் ஒரு அரசானது ஒரு கொலைகாரனை நோயாளியாகக் கருதி அவனை மாற்ற சிகிச்சை தரவேண்டும். மேலும் »
தமிழகத்தின் தலைவிதி
அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். மேலும் »
18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி
1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மேலும் »
'விடுதலைப் புலிகளின் எட்டுக் கப்பல்கள்' அரசாங்கம் ஊடகங்கள் வாயிலாக கட்டுக்கதை
விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்த எட்டு கப்பல்களைக் கைப்பற்றி அவற்றை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப் போவதாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரசாரம் கட்டுக்கதையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »
கடத்திச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி இராசையா துவாராகவுக்கு பரீட்சை எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் கல்வி பயிலும் போது, பல்கலைக்கழகத்தில் வைத்து பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட இராசையா துவாராகவுக்கு கடந்த வருடம் பரீட்சைக்கு தோற்ற பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. மேலும் »
திருமலையில் சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு துரத்திஅடிக்க நடவடிக்கை
திருகோணமலை நகரை அண்மித்த தமிழர் குடியிருப்புப் பிரதேசங்கள் சிலவற்றுக்கு இன்று திடீரெனச் சென்ற கடற்படையினர், வீடுகளைவிட்டு, வேறு இடங்களுக்குச் செல்வதற்கு தயாராகுங்கள் என குடியிருப்பாளர்களுக்கு அறிவித்துள்ளனர். மேலும் »
மகிந்தவை விரட்டி அடித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர் வெள்ளை வேனில் கடத்தல்
மகிந்த ராஜபக்சவிற்கெதிராக லண்டனில் ஹித்ரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் வைத்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் »
சுவிற்சலாந்தில் கைதாகிய தமிழ் செயற்பாட்டாளர்களில் இருவர் விடுதலை
2ம் இணைப்பு சுவிற்சலாந்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிளையின் செயற்பாட்டாளர்கள் 10 பேரில் இருவர் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர் ஏணையவர்கள் நாளை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளனர் மேலும் »
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒன்பதரை லட்சமாக அதிகரிப்பு
நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒன்பதரைலட்சத்தைத் தாண்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment