Home »
இரண்டு
,
சிறிலங்கா
,
புதிதாக
,
விமானங்கள்
,
விமானப்படைக்கு
» சிறிலங்கா விமானப்படைக்கு புதிதாக இரண்டு சீன விமானங்கள்
சிறிலங்கா விமானப்படைக்கு புதிதாக இரண்டு சீன விமானங்கள்
Written By Eve on Friday, September 30, 2011 | 11:25 PM
சீனாவில் இருந்து பெறப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இரத்மலானை விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கொழும்பில் உள்ள சீனத் தூதரக முதல்நிலைச் செயலர் வாங் ஜியான் பெங் இந்த இரு விமானங்களையும் சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்சல் ஹர்ச அபேவிக்கிரமவிடம் கையளித்தார்.எம்.ஏ-60 ரகத்தைச் சேர்ந்த இந்தப் போக்குவரத்து விமானங்களில் 56 பயணிகளை ஏற்றி செல்வதற்கான வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த இரு விமானங்களையும் சிறிலங்கா விமானப்படையின் வர்த்தக நிறுவனமான ஹெலி ருவர்ஸ் மூலம் உள்ளூர் பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment