Headlines News :

Meenakam News World

Home » , , , » அடுத்த இராணுவத்தளபதி பதவி எனக்கு வேணும்: ஜகத் டயஸ்

அடுத்த இராணுவத்தளபதி பதவி எனக்கு வேணும்: ஜகத் டயஸ்

Written By Eve on Wednesday, September 21, 2011 | 2:43 AM

ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளால் துரத்தப்பட்ட  சிறிலங்காவின் ஜெர்மனிக்கான முன்நாள் தூதர் மேஜர் ஜெனெரல் ஜகத் டயஸ் தற்போது வேலையற்று இருக்கின்றார். இனி வெளி நாடுகளில் இராஜ தந்திர பதவிகளுக்கு இவர் லாயக்கல்ல என பீரிஸ் கூறிவிட்டார். காரணம் நிலுவையில் உள்ள போர்க்குற்ற வழக்கே ஆகும்.

ஆகவே தனக்கு முன்பு இருந்த இராணுவ பொறுப்பினை தரவேண்டும் என்றும் கூடவே அடுத்த இராணுவத்தளபதி பொறுப்பிற்கு தான் பொருத்தமானவர் என்றும் அதனை மஹிந்த இராஜபக்‌ஷவே முடிவு எடுக்கவேண்டும் என்றும் தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளார் ஜகத் டயஸ்.

தான் பதவியில் இருக்கும் காலங்களில் யுத்தக் குற்றச் செயல் விவகாரங்கள் தொடர்பில் சுவிற்ஸர்லாந்து அரச அதிகாரிகள் தம்மிடம் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

அடுத்த ராணுவத் தளபதியாகக் கூட பதவி வகிக்கக் கூடிய சாத்தியம் தனக்கே இருப்பதாகவும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் எனவும் பெளவியமாக கூறியுள்ளார் ஜகத் டயஸ்.

மஹிந்த கொடுப்பாரா அந்த பதவியை.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger