Headlines News :

Meenakam News World

Home » , , , , » பெலிஸ் நாட்டுக்குப் படம் காட்டச் சென்ற நம்மவருக்குச் சிறை

பெலிஸ் நாட்டுக்குப் படம் காட்டச் சென்ற நம்மவருக்குச் சிறை

Written By Eve on Saturday, September 17, 2011 | 9:21 AM

தங்களைப் படத்தை தயாரிப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு பெலிஸ் (Belize) நாட்டுக்குள் உட்பிரவேசிக்க முயன்ற இலங்கையர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தாலா மூன்று மாதச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது. பெலிஸில் உள்ள குடிவரவு அலுவலகத்திற்கு தவறான தகவல்களை வழங்கியதாக தமது குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டதையடுத்து 11 இலங்கையர்களுக்கும் தலா 350டொலர் அபாரதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் அபராதத்தை செலுத்துவதற்கு அவர்களிடம் பணமின்மை காரணமாக தலா மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு வழி விமானப் பயணச்சீட்டு மூலமாக பெலிஸ் சென்ற இவர்கள் தாம் மத்திய அமெரிக்க பிரஜைகள் எனவும் பெலிஸ் புளு ஹோட்டலில் படம் ஒன்றை தயாரிக்க வந்ததாகவும் பெலிஸ் குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். ஆனால் குறித்த நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் அவர்கள் இலங்கையர்கள் என்பதும் படம் தயாரிப்பதற்கு அவர்களிடம் பணம் இல்லை என்றும் தெரியவந்தது.

இலங்கை திரும்ப விமானப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளக் கூட இவர்களிடம் பணம் இருக்கவில்லை என்றும் பெலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger