தமிழ்க் கட்சிகளுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து நாளை யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதத்தைத் தற்காலிமாகக் கைவிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, யாழ் குடாவில் மர்ம மனிதர் விவாகரத்தின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களைப் பிணையில் விடுவிப்பதறகான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் சமாதானத்துடன் கலந்துரையாடி அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும்படியும் பொலிஸ்மா அதிபருக்கு அவர் ஆலோலாசனை வழங்கியுள்ளார்.தமிழ்க்கட்சிகள் யாழில் நடத்தவிருந்த போராட்டம் கடந்த இரு வருடங்களில் நடக்கவிருந்த முதலாவது போராட்டம் ஆகும். இந்த போராட்டம் தற்போதைய சூழலில் மஹிந்தவிற்கு சர்வதேச ரீதியான நெருக்கடிகளை கொடுக்கும் என்பது திண்ணம். இந்த வாரம் நடக்கவிருக்கின்ற மனித உரிமை கூட்டத்தொடரினை கவனத்தில் கொண்டும் மற்றும் இரண்டு வருடமாக மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள் என்ற அரசின் பிரச்சாரம் ஆகியவற்றை புறந்தள்ளிவிடலாம் எனவும் எண்ணிய மஹிந்த உடனடியாகவே தமிழ்க்கட்சிகளை அழைத்து பேசி ஏமாற்றியுள்ளார். மஹிந்த வழமையாக ஆயுதபப்டைகள் ஊடாக இவ்வாறான போராட்டங்களுக்கு நடவடிகை எடுப்பார் ஆனால் இப்போ அன்பாக அழைத்துப்பேசியதற்கு காரணம் அவ்வளவு வெளியுலகு அழுத்தமே.
.
Home »
உண்ணாவிரததத்தினை
,
கூறியது
,
நிறுத்துமாறு
,
மஹிந்த
» உண்ணாவிரததத்தினை மஹிந்த நிறுத்துமாறு கூறியது ஏன்?
உண்ணாவிரததத்தினை மஹிந்த நிறுத்துமாறு கூறியது ஏன்?
Written By Eve on Friday, September 9, 2011 | 10:50 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment