Headlines News :

Meenakam News World

Home » , , , » கிளிநொச்சியில் மீண்டும் மர்ம நபர்கள் நடமாட்டம்

கிளிநொச்சியில் மீண்டும் மர்ம நபர்கள் நடமாட்டம்

Written By Eve on Wednesday, September 28, 2011 | 11:19 PM

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள மர்மநபர்கள் நடமாட்டத்தினால் அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

நேற்றைய தினம் திருவையாறு பிரதேசத்தில் மர்மநபர்கள் வீடு புகுந்து நடத்திய வாள்வெட்டில் தந்தையும், மகனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது குறித்த பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மர்மநபர்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு 5பேர் கொண்ட மர்மநபர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளனர்.

வீட்டினுள் நுழைந்தவர்கள் உடனடியாகவே வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தந்தையான பொன்னையா பாலசிங்கம் (வயது60), மகன் பாலசிங்கம் தினேஸ் (வயது32) ஆகியோரை வாளால் வெட்டியுள்ளனர். இதில் தந்தைக்கு முதுகிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மகனுக்கு வயிற்றுப்பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டபோதும், அயலவர்கள் எவரும் உதவ வரவில்லை. இதேவேளை காயமடைந்த மகனுக்கும் மர்மநபர்களுக்கும் இடையில் நடந்த சண்டையினால் மர்மநபர்கள் தொடர்ந்தும் நிற்;க முடியாத மர்மநபர்கள் வீட்டிலிருந்த 9பவுண் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் நடைபெற்று மர்மநபர்கள் வெளியேறிச் சென்று அரை மணிநேரத்தின் பின்னரே காயமடைந்தவர்கள் மீட்;கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை கடந்தவாரமும் இதேபகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 10பவுண் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

மேலுமொரு வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் 36ஆயிரம் ரூபாவைத் திருடிச் சென்றுள்ளனர். இதேவேளை 5பேர் கொண்ட குழுவே இந்தக் கொள்ளை மற்றும் கண்முடித்தனமான தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டு வருவதாகவும், இவர்கள் காற்சட்டையும், ரீசேட்டும் அணிந்திருப்பதுடன் இவர்களில் ஒருவன் சிங்கள மொழிபேசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தகைய மர்மநபர்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மிகநெருக்கமாக இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger