Home »
குடும்பத்தினருக்கு
,
செலவுத்
,
திட்டத்தில்
,
பெருபாலான
,
ராஜபக்ஷ
» வரவு செலவுத் திட்டத்தில் பெருபாலான நிதி ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு
வரவு செலவுத் திட்டத்தில் பெருபாலான நிதி ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு
Written By Eve on Thursday, September 15, 2011 | 8:31 AM
2012 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில், மூலதனம், புனரமைப்பு செலவினங்களில் அதிகளவான நீதி ஒதுக்கீடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் துறைகளுக்கே ஒதுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.அடுத்து வருடத்திற்கான செலவுகள் 22 ஆயிரத்து 300 கோடி ரூபா என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சுக்கு 19 ஆயிரத்து 800 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ், வரும் திவி நெகும வேலைத்திட்டத்திற்காக 440 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது. வீதி அபிவிருத்தி, நிதி, திட்டமிடல் அமைச்சுக்கு மாத்திரம் சுமார் 300 லட்சம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.பாதுகாப்பு அமைச்சுக்கு 200 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை ஒதுக்கப்பட உள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 80 லட்சம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளது. இதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தில் 75 சத வீத நிதி ராஜபக்ஷவினர் ஒதுக்கி கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment