Headlines News :

Meenakam News World

Home » , , , » அரசு காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை

அரசு காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை

Written By Eve on Monday, September 5, 2011 | 3:15 AM

இலங்கையில் உள்நாட்டுப் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை என யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் பிரச்சினைகளை பெண்களிடம் மட்டுமே கூற முடியும், பெண்களாலேயே அறிந்து கொள்ள முடியும், இதன் காரணமாகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் போதியளவு பெண் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் தாம் வலியுறுத்துவதாகவும் விசாகா தர்மதாச கூறினார்.

யுத்தம் சமாதான பேச்சுவார்ததைகளில் முடிவடைந்திருந்தால் இப்படியான பிரச்சினைகளுக்கு இடமிருந்திராது, தற்போது யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும் இன்னும் அரசியல் தீர்வு என்பது எட்டப்படவில்லை, இந்நிலையில் விரைவாக அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்றும் விசாகா தர்மதாச குறிப்பிடுகின்றார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற பிரதேசத்தில் பெண்கள் சுயதொழில் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப் படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து மகளிர் விவகார துணை அமைச்சரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger