Home »
அதட்டாவிட்டால்
,
இலங்கையில்
,
சர்வதேசம்
,
தமிழர்கள்
,
மிஞ்சும்
,
வரலாறே
,
வாழ்ந்த
» சர்வதேசம் அரசை அதட்டாவிட்டால் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்த வரலாறே மிஞ்சும்
சர்வதேசம் அரசை அதட்டாவிட்டால் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்த வரலாறே மிஞ்சும்
Written By Eve on Friday, September 16, 2011 | 9:24 PM
ஈழத் தமிழ் மக்களின் நீண்ட காலப் போரா ட்டம் மிகப் பெரும் துன்பத்தில் முடிந்து போனமை உலகின் சகிக்க முடியாத துன்ப வரலாறுகளில் முதன்மையானதாகிவிட்டது. அக் கொடுந்துன்பத்தை உலக நாடுகள் தெரிந்து கொண்டிருந்தும் அதனைத் தடுத்து நிறுத்த முற்படாமை வேதனையிலும் வேதனை. வன்னி யுத்தத்தில் அகப்பட்ட தமிழ் மக்கள் உலக நாடுகளிடம் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டார்கள். ஐ.நா.அமைப்புகள் வன்னியிலிருந்து வெளியேறிய போது மக்கள் வீதிக்குக் குறுக்கே கிடந்து எங்களை கைவிட்டுப் போகாதீர்கள் என்று மன்றாடினார்கள். ஆனால், நீங்கள் எப் பாடுபட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி விட்டுப் போவது போல ஐ.நா. அமைப்புகள் வன்னி மண்ணிலிருந்து ஓடிச் சென்றன.மீட்பாரும் காப்பாரும் இல்லாமல் உயிரிழந்த தமிழ் மக்களின் விடயத்தில் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைப்பதை தடுப்பதில் கடும் பிரயத்தனங்கள் நடந்தேறுகின்றன. இந்நிலையில் போரினால் உயிரிழந்து, சொத்திழந்து, சொந்தங்களைப் பறிகொடுத்து கண்ணீரும் கம்பலையுமாக வாழும் தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கை உலக நாடுகள் மீதே உள்ளது. எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், பட்ட அவலங்கள், தொடரும் துன்பங்கள் இவையாவற்றுக்கும் முடிபு கிடைக்க வேண்டுமாயின் அது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் கூட எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்ற நினைப்பு தமிழ் மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது.இந்நிலையில், இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளின் அழுத்தம், இறுக்கம் போதுமானவையாகத் தெரியவில்லை. போர் முடிந்துவிட்டது என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாட்டாது. எனவே உலக நாடுகள் ஈழத் தமிழர்களின் நெடுந்துயருக்கு – அவர்கள் நீண்டகால அவல வாழ்வுக்கு முடிபு கட்ட திடசங்கற்பம் கொள்ளவேண்டும். அத்தகையதோர் திடசங்கற்ப நிலை என்பது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை கால அவகாசத்துடன் கட்டாயப்படுத்துவதாகும். இலங்கை அரசுக்கு இத்தகைய கட்டாயப்படுத்தல் இல்லையாயின் எதிர்கால நிலைமை இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாறு மட்டுமே மிஞ்சுவதாக இருக்கும்
Labels:
அதட்டாவிட்டால்,
இலங்கையில்,
சர்வதேசம்,
தமிழர்கள்,
மிஞ்சும்,
வரலாறே,
வாழ்ந்த
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment