Home »
அமைப்புக்கள்
,
எதிர்ப்பு
,
சிவில்
,
சிறிலங்காவில்
,
நலவாய
,
விளையாட்டு:
» சிறிலங்காவில் பொது நலவாய விளையாட்டு: சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு
சிறிலங்காவில் பொது நலவாய விளையாட்டு: சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு
Written By Eve on Thursday, September 8, 2011 | 2:50 AM
பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை அம்பாந்தோட்டையில் வைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தீவிரம் பெற்றுவருகின்றது. இந்த சூழலில் சிறிலங்காவின் சிவில் அமைப்புக்கள் சிறிலங்காவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளன.அம்பாந்தோட்டையில் விளையாட்டுப்போட்டியினை நடத்துவதாயின் அதற்கு முன்னதாக சிறிலங்காவில் உண்மையான அமைதி வரவேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் முழுமையாக வழங்கபப்டவேண்டும். அரசாங்கத்தின் சிவில் அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், ஊடக அடக்குமுறை ஆகியன ஒழிக்கப்படவேண்டும் இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளினை முன்வைத்து சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மாற்று கொள்கைகளுக்கான மத்திய சிலையம், சிறிலங்கா அமைதிக்கான போராட்டகுழு, மனித உரிமை கண்காணிப்பகம்,பொதுனலவாய நாடுகளின் மனித உரிமை அமைப்பு, சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் அமைப்பு ஆகிய முக்கிய அமைப்புக்கள் இந்த அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment