ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இலங்கைப் படையினர் சிறார்களைக்கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹெய்டி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தி நியூ அமெரிக்கன் இணையத்தளத்துக்கு ஹெய்டி சட்டவாளர்கள் தலைமைத்துவ தகவல் வலையமைப்பு தகவல் வெளியிடுகையில்; இலங்கைப் படையிரால் ஏழு வயது சிறுமிகள் கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்த இணையத்தளம் 2007 ஆம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 114 இலங்கைப் படையினர் தண்டிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
இலங்கைப் படையினர், ஹெய்டிய பெண்களையும், பெண்பிள்ளைகளையும், 7 வயதான சில சிறுமிகளையும் கூட முறைப்படியான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹெய்டி சட்டவாளர்கள் தலைமைத்துவ வலையமைப்பின் தலைவர் எசிலிடன்ரோ குற்றம்சாட்டியுள்ளார்.
தமது படையினர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. ஆனால் பெரும்பா லானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமல் தப்பிவிட்டதாகவும் தி நியூ அமெரிக்கன் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment