Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மரணச் சடங்கில் கலந்த கொண்ட சரத் பொன்சேகா (Photo in )

மரணச் சடங்கில் கலந்த கொண்ட சரத் பொன்சேகா (Photo in )

Written By Eve on Sunday, August 28, 2011 | 9:32 PM

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா நேற்று  மாலை மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது சகோதரரின் புதல்வியின் மரணச் சடங்கிலேயே அவர் கலந்து கொண்டார்.களனியிலுள்ள அவரது சகோதரரின் வீட்டுக்குச் சென்ற அவர் சுமார் அரைமணி நேரம் அங்கிருந்தார். தனது உறவினர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் அவருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.சிறைச்சாலை காவலர்களின் பாதுகாப்புக்கு மேலதிகமாக அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

அவரது பாரியாரான அனோமா பொன்சேகா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் அங்கு வருகை தந்திருந்தனர்.மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger