Headlines News :

Meenakam News World

Home » , , , , , » டெல்லி நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற மதிமுக ஆர்ப்பாட்டம்.(Photo in)

டெல்லி நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற மதிமுக ஆர்ப்பாட்டம்.(Photo in)

Written By Eve on Friday, August 12, 2011 | 5:45 AM

சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்திற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுவரை சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இந்திய அரசு, தன் துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இப்போதாவது ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் பேரவையிலும், சிங்கள அரசுக்கு எதிர்நிலையை எடுப்பதற்கு முன்வர வேண்டும்;

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தையும், பொலிஸாரையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்;

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும் என்பதால், அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், யஷ்வந்த் சின்ஹா, ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கான மதிமுக தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி, முன்னாள் எம்.பி. கிருஷ்ணன், நிர்வாகிகள் மல்லை சத்யா, மாசிலாமணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger