Headlines News :

Meenakam News World

Home » , , , » செங்கலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் பலி

செங்கலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் பலி

Written By Eve on Friday, July 15, 2011 | 11:56 AM

செங்கலடி பதுளை வீதியில் தம்மானம்வெளிப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் சாரதி காயமடைந்துள்ளார்

குறித்த சம்பவத்தில் பன்குடாவெளி அரசினர் தமிழ் ககலவன் பாடசாலையில் பணியாற்றும் 45 வயதுடைய வே.கோவிந்தராஜா என்ற ஆசிரியர் பலியானவரென இனங்காணப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தொரிவித்தனர்

கனரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிற்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலை;கு மாற்றபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்மானம் வெளியில் வீதிரொரத்தில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கதைத்துக்கொண்டு நின்ற வேளையில் எதிரே வேகமாக வந்த கனரக வாகனம கட்டுபாட்டை இழந்து ஆசிரியர் மீது மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger