Headlines News :

Meenakam News World

Home » , , , , , » எஞ்சியுள்ள போராளிகளை சரணடையவும்: புதுப்புரளியை கிளப்பும் மஹிந்த அரசு

எஞ்சியுள்ள போராளிகளை சரணடையவும்: புதுப்புரளியை கிளப்பும் மஹிந்த அரசு

Written By Eve on Thursday, July 28, 2011 | 10:17 AM

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறானவர்கள் உடனடியாக முகாமில் சரணடையுமாறும் அவ்வாறு சரணடைபவர்களுக்கு புனர்வாழ்வு ஏற்பாடுகளையும் தொழிற் பயிற்சிகளையும் வழங்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,கிழக்கு மாகாணத்தைச் சிறிலங்கா அரச படை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு பேராளி கூட சரணடையவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ள அவர்,வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11,696 போராளிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் இதுவரை 8,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழிற் பயிற்சியும் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எல்லோரும் அழிந்து விட்டனர், எஞ்சியவர் சரண்டந்துவிட்டனர். இனி புலிகளால் தலை எடுக்கவே முடியாது என மஹிந்தா, தம்பி கோத்தா கடந்த இரு வருடமாக கூறி வந்தார்கள். இப்போ என்ன புதுப்புரளி?

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger