Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » கனடாவில் றொஹான் குணரத்தின மீது நஸ்டஈடு மற்றும் அவதூறு வழக்கு

கனடாவில் றொஹான் குணரத்தின மீது நஸ்டஈடு மற்றும் அவதூறு வழக்கு

Written By Eve on Tuesday, July 12, 2011 | 11:33 PM

கனடாவின் முன்னணி அமைப்பான கனடியத் தமிழ்க்காங்கிரஸ் சிங்கப்பூரை மையமாகக் கொண்டியங்கும் றொகாண் குணரத்தின மீதும், கொழும்பிலிருந்து வெளிவரும் லக்பீம பத்திரிகையின் மீதும் மான நஸ்டஈடு மற்றும் அவதூறு வழக்கொன்றை ஒன்றாரியோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடொன்றை நேற்று காலை 10.30 மணிக்கு கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தனது பணிமனையில் ஏற்பாடு செய்துள்ளது.

கனடியத்தமிழ்க் காங்கிரஸ் தலைவர் உமாசுதன் சுந்தரமூர்த்தி, பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் வழக்கில் கனடாவின் புலிகளின் பிரதிநிதிகளாக கனடியத் தமிழ்க் காங்கிரஸ் செயற்படுகிறார்கள் என்று றொகான் குணரத்தன லக்பீமா பத்திரிக்கைக்கு தெரவித்ததை எதிர்த்தே இவ் வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்மக்களின் வாழ்வாதரத்தை உயர்விக்கும் ஒரு அமைப்பாகவே இருந்து வகிறது என்றும் றோகான் குணரத்தினாவின் இக் கூற்று இந்த அமைப்பை களங்கப்படுத்துவதாகவும் தெரிவித்து 1 மில்லியன் டொலர்களை கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கோரியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு கனடாவில் கனேடியன் தமிழ் காங்கிரஸ் என்ற பெயரின் கீழ் இயங்குவதாக ரொஹான் குணவர்த்தன இலங்கை பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார் எனக்கூறி ஒன்றாரியோ உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொரப்பட்டுள்ளது.

எம்மீது மீண்டும் மீண்டும் அவதூறு கூறுபவருக்கு எதிராக எப்போதும் எவரும் சவால் விடுத்ததில்லை என கனேடியன் தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிநபர் ஒருவரும் ரொஹான் குணரட்னவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கில் ரொஹான் குணரட்ன அவதூறு கூறுவதினை நிறுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவர் கூறுகின்றவற்றை நிரூபிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

12 பக்கங்கள் கொண்ட வழக்கு தாக்கல் ஆவணத்தில் காங்கிரஸ் தீவிரவாதத்துக்கும் ஆட்கடத்தலுக்கும் மற்றும் வன்முறை செயற்பாடுகளுக்கும் துணைபோவதாக ரொஹான் போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான போலிக்குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கனேடிய அரசு விசாரணைகள் நடத்துவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger