Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , , , » 5,200 தமிழர்கள் ரகசியத் தடுப்பில்; சோஷலிச இளைஞர் அமைப்பு திடுக் தகவல்

5,200 தமிழர்கள் ரகசியத் தடுப்பில்; சோஷலிச இளைஞர் அமைப்பு திடுக் தகவல்

Written By Eve on Tuesday, July 26, 2011 | 8:49 PM

சுமார் 5,200 தமிழ் அரசியல் கைதிகள் இரகசியமான இடங்களில் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின்  பெயர் விவரங்களை சோஷலிச இளைஞர் அமைப்பு  திரட்டுகின்றது. இந்தப் பெயர் பட்டியல் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பகிரங்கப்படுத்தப்படும்.

இவ்வாறு சோஷலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். சோஷலிச இளைஞர் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்றது. காணாமற்போன இளைஞர், யுவதிகள் குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணம் ஒன்றை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய ரத்னாயக்க, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி நாளை 28ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் இனவாதத்துக்குப் பதிலாக இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger