Home »
(Photo
,
இடங்கள்
,
சிவிலியன்கள்
,
தாக்குதல்
,
தெரிந்தும்
,
நடத்தப்பட்டது
,
வாழும்
» சிவிலியன்கள் வாழும் இடங்கள் தெரிந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது (Photo in)
சிவிலியன்கள் வாழும் இடங்கள் தெரிந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது (Photo in)
Written By Eve on Wednesday, September 7, 2011 | 10:50 AM
அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னாள் அரச ஊழியர்களே அதிகம் காணப்படுவதாகவும் கொலைகள், ஆட்கடத்தல் தொடர்பில் சான்றுகளை ஆராய இது தவறிவிட்டது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.சர்வதேச விசாரணைக்கு நம்பத்த தகுந்த மாற்றீடாகக் கூட இந்த ஆணைக் குழுவின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஸாம் சரிபி கூறியுள்ளார்.இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை 69 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இறுதிக் கட்ட யுத்தத்தின்போது 10,000 க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பதானது நேரடிச் சாட்சியங்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் ஆதாரமாகக் கொண்டே தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.சிவிலியன்கள் வாழும் பிரதேசங்கள் என நன்கு அடையாளம் காணப்பட்ட நிலையிலும் அந்த இடங்கள் மீது படையினரால் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயமாகவும் பயன்படுத்தினர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Labels:
(Photo,
இடங்கள்,
சிவிலியன்கள்,
தாக்குதல்,
தெரிந்தும்,
நடத்தப்பட்டது,
வாழும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment