Headlines News :

Meenakam News World

Home » , , , , , » இலங்கை பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் - திருச்சியில் டி.ராஜா

இலங்கை பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் - திருச்சியில் டி.ராஜா

Written By Eve on Sunday, July 17, 2011 | 10:35 AM

 "இலங்கை பிரச்சினை, ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
இந்த சம்பவத்தின் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. உள்துறை மந்திரி சிதம்பரத்தின் வாய்ச்சொல்லில் காட்டும் திறமை, அவரது செயல்பாட்டில் இல்லை. உள்துறை பயங்கரவாத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.

இன்னும் 2 வாரத்தில் பாராளுமன்றம் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த பிரச்சினை குறித்து கேள்வியை எழுப்புவோம். ஆனால் இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மெளனமாக உள்ளது. இலங்கை பிரச்சினை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும். இதனையும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்புவோம்.

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித மீறல்களின் சி.டி.க்களை பார்த்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.  ஆனால் இந்தியா மெளனமாகவே உள்ளது என கூறினார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger