Headlines News :

Meenakam News World

Home » , , » தென் சூடானுக்கு ஜனாதிபதி வாழ்த்து

தென் சூடானுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Written By Eve on Friday, July 15, 2011 | 10:32 PM

புதிதாக சுதந்திரம் பெற்ற தென்சூடானுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நட்பு நாடு என்ற அளவில் தென்சூடானின் சுதந்திரத்தில் இலங்கை பங்கேற்பதாக ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்காவின் 54 வது சுதந்திர நாடாக மாறியுள்ள தென்சூடானின் தலைநகர் லூபாவில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் இலங்கையின் சார்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் கென்ய தூதுவர் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில் நைரோபியின் இலங்கை உயர்ஸ்தானிகரையே தென்சூடானின் உயர்ஸ்தானிகராக நியமிக்க இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger